Reading Time: < 1 minute

கனடாவில் ஏற்கனவே வசிக்கும் தகுதியுடைய அதிகபட்சம் 2 இலட்சம் தற்காலிகக் குடியிருப்பாளர்களுக்கு 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர வதிவிட அந்தஸ்து வழங்குவதற்கான புதிய நடவடிக்கையை கனேடிய அரசு அறிவித்துள்ளது.

Tamil Business Directory

2026ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டம் மற்றும் 2027–2029 குடிவரவு மட்டத் திட்டத்துடன் தொடர்புடைய இந்த நடவடிக்கை, தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நிலுவையிலுள்ள குடிவரவு விண்ணப்பங்களை விரைவாகத் தீர்க்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, ஒரு இலட்சம் இடங்கள் கனடாவில் ஏற்கனவே பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக ஒதுக்கப்படவுள்ளன. மாகாண நியமனத் திட்டம் உள்ளிட்ட குறிப்பிட்ட குடிவரவுத் திட்டங்களின் கீழ் தகுதி பெறுவோர் இதில் பயனடையலாம்.

மேலும் ஒரு இலட்சம் இடங்கள் மனிதாபிமான அடிப்படையிலான விண்ணப்பதாரர்கள், உக்ரைன் மற்றும் ஹொங்கொங் தொடர்பான குறிப்பிட்ட குடிவரவுத் திட்டங்களின் விண்ணப்பதாரர்கள் மற்றும் குடும்ப ஒன்றிணைப்புக்காகக் காத்திருப்பவர்களுக்காக ஒதுக்கப்படவுள்ளன.

இது தனியான புதிய குடிவரவு விண்ணப்பத் திட்டம் அல்ல என்றும், இந்த நடவடிக்கையின் கீழ் பரிசீலிக்கப்படுவதற்குத் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் கனேடிய குடிவரவுத் திணைக்களம் (IRCC) தெரிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.