ஒன்ராறியோ மாகாண அரசு, குடியேற்ற அந்தஸ்தின் அடிப்படையில் சமூக உதவித் திட்டங்களுக்கான தகுதி விதிகளை கடுமையாக்கியுள்ளது.
புதிய விதிகளின்படி, கனடாவில் சட்டபூர்வமான குடியேற்ற அந்தஸ்து இல்லாமல் தங்கியிருப்பவர்கள் இனி Ontario Works (OW) அல்லது Ontario Disability Support Program (ODSP) ஆகிய திட்டங்களின் கீழ் நிதியுதவி பெற முடியாது.
இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 13, 2026 முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக ஒன்ராறியோ அரசு அறிவித்துள்ளது.
தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கும் தகுதி இல்லை
புதிய விதிமுறைகளில், சட்டவிரோதமாக கனடாவில் தங்கியிருப்பவர்கள் மட்டுமன்றி, தற்காலிக அடிப்படையில் கனடாவில் தங்க அனுமதி பெற்ற சில பிரிவினரும் Ontario Works மற்றும் ODSP உதவிகளுக்கு தகுதி பெறமாட்டார்கள்.
இதன்படி,
- Study Permit அல்லது Student Visa வைத்திருப்பவர்கள்
- Work Permit மூலம் கனடாவில் இருப்பவர்கள்
- Visitors மற்றும் Tourists
ஆகியோர் சமூக உதவித் திட்டங்களுக்கு தகுதியற்றவர்கள் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.
சமூக உதவிக்காக விண்ணப்பிப்பவர்கள் தங்களது கனேடிய குடியுரிமை அல்லது குடியேற்ற அந்தஸ்தை நிரூபிக்க வேண்டியிருக்கும் என்றும் Ontario அரசு தெரிவித்துள்ளது.
அகதி கோரிக்கையாளர்களின் நிலை என்ன?
கனடாவிற்குள் அதிகாரப்பூர்வமாக அகதி பாதுகாப்புக் கோரிக்கை செய்துள்ள refugee claimants தொடர்பாக தனியான தகுதி விதிகள் உள்ளன.
Ontario Works-இன் தற்போதைய வழிகாட்டுதலின்படி, அதிகாரப்பூர்வமாக அகதி பாதுகாப்புக் கோரிக்கை செய்துள்ளவர்கள், மற்ற தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால் உதவி பெறக்கூடியவர்களாக கருதப்பட்டுள்ளனர். புதிய அரச அறிவிப்பிலும் refugee claimants தடை செய்யப்பட்ட பிரிவினராக குறிப்பாக குறிப்பிடப்படவில்லை.
எனினும், ஒவ்வொருவரின் குடியேற்ற நிலையும் வேறுபடக்கூடும் என்பதால், தகுதி அவர்களின் தனிப்பட்ட immigration status மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
Tribunal தீர்ப்புக்குப் பின்னர் விதிமுறை மாற்றம்
இந்த மாற்றத்திற்கு முன்னதாக, பல ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிக வேலை அனுமதியுடன் கனடாவிற்கு வந்த ஒருவர், அவரது அனுமதி காலாவதியான பின்னரும் நாட்டில் தங்கியிருந்த நிலையில் Ontario Works உதவி பெற தகுதியுடையவர் என்று Social Benefits Tribunal தீர்ப்பளித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து Premier Doug Ford, சட்டபூர்வமான குடியேற்ற அந்தஸ்து இல்லாதவர்களுக்கு மாகாணத்தின் சமூக உதவித் தொகைகள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில் விதிகள் மாற்றப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து Ontario Works Act, 1997 மற்றும் Ontario Disability Support Program Act, 1997 ஆகியவற்றின் கீழான விதிமுறைகள் தற்போது திருத்தப்பட்டுள்ளன.
Ontario Children, Community and Social Services அமைச்சர் Michael Parsa, வரிப்பணத்தில் செயல்படும் சமூக உதவித் திட்டங்கள் அவற்றுக்காக தகுதி பெற்றவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதே இந்த மாற்றத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
Ontario Works என்பது பொருளாதார சிரமத்தில் உள்ள தகுதியானவர்களுக்கு உணவு, வீடு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான நிதி உதவியை வழங்கும் திட்டமாகும். ODSP திட்டம் பொருளாதார தேவையுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான மற்றும் பிற ஆதரவுகளை வழங்குகிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.