Reading Time: < 1 minute

கனடாவில் அதிக எண்ணிக்கையில் களவாடப்பட்ட வாகனம் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஹொண்டா சீ.ஆர்.வீ ரக வாகனங்களே அதிக எண்ணிக்கையில் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

ஈக்விட் அசோசியசன் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025ம் ஆண்டில் 2137 ஹொண்டா சீ.ஆர்.வீ ரக வாகனங்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓன்றாரியோ மாகாணத்தில் மட்டும் 1598 வாகனங்கள் களவாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ஹொண்டா சிவிக் மற்றும் டொயொட்டா ரெவ் ரக வாகனங்கள் அதற்கு அடுத்தபடியாக களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் கனடாவில் அதிகளவான வாகனங்கள் களவாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாகனங்கள் களவாடப்படுவதனை தடுக்கக்கூடிய வகையிலான தொழில்நுட்பங்கள் வாகனங்களில் நிறுவப்பட வேண்டுமென பெரும் எண்ணிக்கையிலான கனடியர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.