இணையவழியில் ஆன்மீக வகுப்புகளை நடத்திவரும் லியானா ஷாந்தி (Liana Shanti) என்பவருக்கு எதிரான அவதூறு வழக்கில், மூன்று கனடியர்களுக்கு 56 மில்லியன் கனடிய டொலர் இழப்பீடு வழங்க அமெரிக்காவின் ஹவாய் மாநில நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
லியான் வில்சன் (Liane Wilson) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், உலகளவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சீடர்கள் இருப்பதாகக் கூறிவருகிறார்.
சாஸ்காட்செவன் மாகாணத்தைச் சேர்ந்த பாலா ஹேகார்த், பைரன் ஹோர்வத் மற்றும் ஸ்டெபானி ஹோர்வத் ஆகிய மூவருக்கு எதிராக ஷாந்தி முதலில் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.
ஆனால், அவரது குற்றச்சாட்டுகளை நிராகரித்த நடுவர் மன்றம், மூவர் மீதும் ஷாந்தி பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி அவதூறு ஏற்படுத்தியதாகத் தீர்மானித்தது.
குறிப்பாக, குழந்தைகளைத் துன்புறுத்துவோர், சாத்தானிய வழிபாட்டில் ஈடுபடுவோர், பில்லிசூனியம் செய்பவர்கள் என இணையத்தில் அவதூறு பரப்பப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த இணையவழித் தாக்குதலால், வழக்குச் செலவுகளைச் சமாளிக்கத் தனது வீட்டையே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பாலா ஹேகார்த் தெரிவித்துள்ளார்.
2026 ஆகஸ்ட் 13ஆம் திகதி வழங்கப்பட்ட நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, மொத்தம் 40.1 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 56 மில்லியன் கனடிய டொலர்) இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக லியானா ஷாந்தி தெரிவித்துள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.