Reading Time: < 1 minute

ஒண்டாரியோ ஹமில்டனின் பாடசாலைகளில் முக கவசம் அணியும் நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹமில்டன் பொது பாடசாலை சபையினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து பாடசாலைக்கு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹமில்டனின் வென்ட்வோர்த் மாவட்ட பாடசாலை சபையின் உறுப்பினர்கள் தற்காலிக அடிப்படையில் இந்த முக கவச நடைமுறையை அறிமுகம் செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.

வென்ட்வோர்த் பாடசாலைகளில் இந்த முக கவச நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.

எவ்வாறெனினும், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரும்பினால் முக கவசம் இன்றி பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும் எனவும் இது தொடர்பில் கட்டுப்பாடுகள் கிடையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.