கனடாவின் ஹமில்டனில் தீ விபத்து காரணமாக வர்த்தக கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.
ஹமில்டன் கிங்ஸ் வீதியில் அமைந்துள்ள நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த கட்டடம் முன்னதாக சுகாதார தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கட்டடத்தின் பெரும்பகுதி பலகையினால் உருவாக்கப்பட்டது என்ற காரணத்தினால், தீ வேகமாக பற்றிக் கொண்டு பரவியதாக தீயனைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
#BREAKING building actively collapsing in downtown Hamilton. Heavy fire and smoke has set fire to a nearby apartment building. pic.twitter.com/v2JlxYZ78t