Reading Time: < 1 minute
ஹட்சன் கடற்கரையை பார்வையிட வரும் பார்வையாளர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவலாம் என்று உள்ளூர்வாசிகள் கவலைப்படுவதால், அப்பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.
ஒரு துணைச்சட்டத்தின் கீழ், சீரான நடை அல்லது நடைபயிற்சி செய்பவர்கள் இன்னும் அணுக அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், வெயிலில் இருப்பதற்கும், நீந்துவதற்கும் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பொலிஸார் இப்பகுதியில் பாதுகாப்புக் கவனிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் விதிமீறலுக்கு 50 முதல் 250 அமெரிக்க டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
கடற்கரைப் பருவத்தின் தொடக்கத்தைப் பற்றி உற்சாகமாக இருக்கும் மக்களுக்கு இதுவொரு சோகமான செய்தியாக அமைந்துள்ளது.