கனடாவில் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழ் இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஸ்கார்ப்ரோ பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட போது குறித்த இளைஞன் உள்ளுர் நேரப்படி இரவு 8.20 அளவில் விபத்துக்கு முகம்கொடுத்ததாக விசாரணைகளில் போது தெரியவந்தது.
உயிரிழந்த இளைஞர் 17 வயது மதிக்கத்தக்க சாமுவேல் டேன் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தின் போது படுகாயமடைந்த அந்த இளைஞர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனைத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
COLLISION: Confederation Dr + Scarborough Golf Club Rd – Pedestrian struck by car – Very serious injuries – Citizens attempting CPR – Police o/s – EMS rushed – We will be assisting with emergency run – Expect roads to be closed#GO1835577 ^dh