Reading Time: < 1 minute

ஒன்ராறியோ மாநிலத்திலுள்ள நோயாளர்களுக்கு உயர்தர பராமரிப்பினை வழங்குவதற்கென ஸ்காபரோ சுகாதார கட்டமைப்புக்கு 26.83 மில்லியனுக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்றால் உருவான நிதி நெருக்கடியிலிருந்து மருத்துவமனைகளை விடுவிப்பதற்கு உதவுமுகமாக முன்னரே அறிவிக்கப்பட்ட 1.2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியான இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதனூடாக மருத்துவமனைகளின் மீதான நிதியியல் அழுத்தத்தினைக் குறைப்பதுடன் ஒன்ராறியோ வாழ் மக்களின் மருத்துவ தேவைகளுக்கும் அவர்களுக்கான உயர்தர சேவையை தொடர்ந்து வழங்குவதற்கும் பயன்படும்.

இந்நிதியானது, கோவிட்-19 நோய்த்தொற்றினால் உருவாகும் எத்தகைய மாறுபட்ட நெருக்கடி நிலையையும் மருத்துவமனைகள் சமாளிக்க உதவியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவிலுள்ள பல மருத்துவமனைகள் அதிகரித்த நோய்த்தொற்றால் ஏற்பட்ட நிலைமையின் நிமித்தம் தமது வருடாந்த நிதி ஒதுக்கீட்டுக்கான பற்றாக்குறையால் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றன.

இந்த முக்கியமான இத்தருணத்தில் ஒன்ராறியோவிலுள்ள மருத்துவமனைகள் தமது நிதிநிலையில் ஸ்திரத்தன்மையுடன் விளங்குவது முக்கியம் என்பதனால், ஒன்ராறியோ அரசானது வரலாற்றுத் தேவையான மருத்துவமனைகளின் நிதிப்பற்றாக்குறையைப் போக்கும் விதத்தில் இந்நிதியினை வழங்குகிறது.

இந்த 26.8 மில்லியன் நிதி ஒதுக்கீடானது ஸ்காபரோ மருத்துவமனைகளின் நிதிநிலையை வலுவாக வைத்திருக்க உதவுவதுடன், ஸ்காபரோ வாழ் மக்களுக்குத் தேவையான உயர்தர மருத்துவ பராமரிப்பையும் வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.