கனடாவில், வெளிநாட்டு தலையீடு குறித்த விசாரணைகளுக்கு உதவுமாறு, புலம்பெயர் சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெளிநாட்டு தலையீடு குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆணைக்குழுவொன்று இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் புலம்பெயர் சமூகங்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தகவல்களை வழங்கும் போது பாதகமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடுவதாக சில புலம்பெயர் சமூகங்கள் குறிப்பிட்டதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளின் தலையீடுகள் தொடர்பிலான தகவல்கள் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தல்களின் போது சீனா, தலையீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த தகவல்களை பெற்றுக் கொள்வதில் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு இன்றியமையாதது என வெளிநாட்டு தலையீடு குறித்து விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மேரி ஜோஸ் ஹோக் தெரிவித்துள்ளார்.