கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பகுதியில் வீட்டு அழைப்பு மணியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் தம்பதியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் கதவில் பயன்படுத்தப்படும் அழைப்பு மணியை குறித்த தம்பதியினர் அயலவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அயலவர்களை இழிவுபடுத்தும் வகையில் குறித்த நபர்கள் ஓசை எழுப்பியும் தூற்றியும் உள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த தம்பதியினருக்கு 900 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தவறான மொழிப்பிரயோகம் மற்றும் கூச்சலிடல் போன்ற செயற்பாடுகளில் இந்த தம்பதியினர் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஹொங் விக் சான் மற்றும் ஹுங் ஏஞ்சலா சியூங் ஆகிய தம்பதியினருக்கு எதிராக இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டு அழைப்பு மணியின் ஒலி பெருக்கி சாதனத்தை பயன்படுத்தி இவர்கள் அயலவர்களுக்கு இடையூறு விளைவித்து வந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.