Reading Time: < 1 minute

வீடற்ற 30 கல்கேரியர்களுக்கு, புதிய வீட்டுத் திட்டத்திற்கு செல்லும் வாய்ப்பினை மிகவிரைவில் கனேடிய அரசாங்கம் வழங்கவுள்ளது.

நகரின் வடமேற்கில் அமைக்கப்பட்டு வரும் இந்த வீட்டு திட்டத்திற்கே, இந்த கோடையில் அவர்கள் செல்லவுள்ளனர்.

7000 பிளொக்- பவுனஸ் வீதியில் அமைந்துள்ள புதிய வசதிகளை கொண்ட வீடுகள் 5.7 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வீட்டு திட்ட வேலைகள் விரைவில் நிறைவடையும் என மத்திய மற்றும் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வீடற்றவர்கள் உச்ச மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த வீடு திட்டமானது ஒட்டாவாவின் தேசிய வீட்டுவசதி வியூகத்தின் (என்.எச்.எஸ்) ஒரு பகுதியாகும்.

இது 100,000 புதிய வீடுகளை உருவாக்கி 530,000 குடும்பங்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான 10 ஆண்டுகள், 55 பில்லியன் டொலர்கள் கொண்ட ஒரு திட்டத்தின் பகுதியாகும்,