Reading Time: < 1 minute
வர்த்தக சிக்கல்களினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக முறுகல் நிலை காரணமாக விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கனோலா எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.