Reading Time: < 1 minute

கனடாவில் விளையாட்டுத் துப்பாக்கிகள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

துப்பாக்கிகள் போன்ற உருவ அமைப்பை கொண்ட விளையாட்டு துப்பாக்கிகள் சிலர் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு விளையாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தும் போது மக்கள் பீதி அடைய நேர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் எல்கின் துறைமுகப் பகுதி கரையோரத்தில் இருவர் துப்பாக்கிகளுடன் சஞ்சரிப்பதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபர்களை சோதனை இட்டபோது அவை இரண்டும் விளையாட்டு துப்பாக்கிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

நிஜ துப்பாக்கிகள் போன்றே இவ்வாறு விளையாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்பது ஆபத்துக்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாதாரண துப்பாக்கிகளையும் இவ்வாறு விளையாட்டு துப்பாக்கிகளையும் பிரித்து அறிந்து கொள்ள முடியாதுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ்வாறு நிஜத்துப்பாக்கிகளைப் போன்ற விளையாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்துவது பொருத்தமாகாது என பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இவ்வாறு விளையாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியவர்கள் என அடையாளப்படுத்தப்படக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தும் போது பொறுப்புணர்வுடன் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளார்.