விமானங்களில் முகக்கவசங்களை அணிய மறுக்கும் பயணிகளுக்கு எதிராக, அடுத்த வாரம் முதல் ‘வெஸ்ட் ஜெட்’ கடுமையான புதிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. செப்டம்பர் 1ஆம் முதல் இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருகின்றன.
விமானத்தில் பயணிப்பவர்கள், ஆரம்பம் முதலே முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் எனவும், பயணி முகக்கவசம் அணிய மறுத்துவிட்டால், விமானம் திரும்பி அதன் தொடக்க நிலைக்குத் திரும்பும் என வெஸ்ட்ஜெட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எட் சிம்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெஸ்ட்ஜெட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எட் சிம்ஸ் கூறுகையில், “பயணிகள் முதலில் விமான ஊழியர் குழுவினரால் முகக்கவசத்தை அணியுமாறு கேட்கப்படுவார்கள். முகக்கவ இணக்கம் அவசியம் என்று அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுக்கப்படும்.
அந்த இரண்டு நடவடிக்கைகளிலும் பயணிகள் முகக்கவசம் அணியவில்லை என்றால், நீண்ட கால தடைகள் இருக்கும். அவர்கள் ஒரு வருடத்திற்கு பயணம் செய்ய முடியாத பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்” என கூறினார்.
இரண்டு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அனைத்து விமானங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும். உத்தியோகபூர்வ மருத்துவரின் குறிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே கட்டாய முகக்கவசத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.