Reading Time: < 1 minute

அமெரிக்காவில் விமானப் பணிப்பெண்ணைத் தவறாக தீண்டியதற்காக கனேடியர் ஒருவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் திகதி கான்கனில் இருந்து மியாமிக்கு சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்iந்த சம்பவம் நடந்துள்ளது.

அதில் பயணம் செய்த 50 வயதான எனியோ சோகோரோ சயாஸ் (Enio Socorro Zayas) எனும் கனேடியர் விமானப் பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.

அவர் மீதான வழக்கு திங்கட்கிழமை மியாமியில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

விமானப் பணிப்பெண் பயணிகளுக்கு தின்பண்டங்களை வழங்கிக்கொண்டு இருந்ததபோது இருக்கையில் அமர்ந்திருந்த Zayas , ​​​​அவர் தூங்கிக்கொண்டிருப்பதாகக் கருதி, அவரது மடியில் அவருக்கான தின்பண்ட பொட்டலத்தை வைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மற்ற பயணிகளுக்கு சேவை செய்வதற்காக அப்பெண் மறுபக்கம் திரும்பியபோது, ​​அவரது கால்களுக்கு அடியிலிருந்து மெதுவாக மேலே ஒரு கை வந்து தவறாக பிடிப்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்த விமானப் பணிப்பெண் அந்த நபரிடம் ‘அப்படி செய்யக்கூடாது’ என்று கூறியதாக நீதிமன்றத் தாக்கலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, Enio Socorro Zayas-ன் நடத்தையை கண்ட பயணிகள் சீற்றத்தை வெளிப்படுத்தினர். விமானம் மியாமிக்கு வந்த பிறகு விமானப் பணிப்பெண் பொலிஸாருடன் பேசினார். ஜயாஸ் மீது சுமத்தப்பட்ட ஆரம்பக் குற்றச்சாட்டு பாலியல் வன்கொடுமை என்று சாயாஸின் வழக்கறிஞர் கூறினார்.

ஆனால் அரசாங்கத்திடம் இன்னும் கடுமையான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை, எனவே வழக்கறிஞர்கள் ஆறு மாத சிறைத்தண்டனைக்கு ஈடாக குற்றச்சாட்டை ஒரு தவறான தாக்குதல் குற்றச்சாட்டாக குறைத்துள்ளனர் என்றும் இன்சைடர் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் வெளியிட்ட விவரங்களின்படி, 2021-ஆம் ஆண்டில் விமானங்களில் இடையூறு விளைவிக்கும் வகையில் சுமார் 6,000 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.