Reading Time: < 1 minute

சிலர் அநாகரீகமான விமர்சனங்களை முன்வைப்பதாக கனடிய பிரதமர் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.

கனடாவை சேர்ந்த சிலர் மிக அநாகரீகமான விமர்சனங்களை முன் வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தமது குடும்பத்தை இழிவுபடுத்தும் வகையில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது சில சந்தர்ப்பங்களில் உணர்வு பூர்வமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக கட்சிக்கு உள்ளேயும் பொதுவெளியிலும் பல்வேறுபட்ட விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சில விமர்சனங்கள் அநாகரீகமானவை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

எவ்வாறு எனினும் பொதுவாக கனடியர்கள் நாகரீகமானவர்கள் எனவும் பெரும்பான்மையானவர்கள் மிக நாகரீகமாக நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தம்மை மிக இழிவான வகையில் தரக்குறைவாக விமர்சனம் செய்யும் நபர்களுக்கு தமது விளக்கத்தை அளிப்பதற்கு விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொது தேர்தலில் லிபரல் கட்சியை வழிநடத்த திட்டமிட்டுள்ளதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.