Reading Time: < 1 minute

கனடாவின் வின்னிப்பெக் பகுதியில் நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரை காயப்படுத்தியுள்ளார்.

விசாரணை ஒன்றின் போது இவ்வாறு குறித்த நபர், பொலிஸ் உத்தியோகத்தரை கடித்து, காயப்படுத்தியுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் அச்சுறுத்தி அவரது கையை கடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார்.

26 வயதான ராவ்டீப் சிங் என்ற நபர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தியமை, அவரை உடல் ரீதியாக தாக்கி காயப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது. ‘

இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர் பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.