Reading Time: < 1 minute

வின்ட்சரில் 1 மில்லியன் டொலர்கள் நிதி மோசடி செய்ததாக நம்பப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்ட பெண்னொருவர் 5,000 அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான மோசடி குற்றச்சாட்டையும், அடுத்த நாள் கைது செய்யப்பட்டவர் 5,000 அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான மோசடி குற்றச்சாட்டையும் எதிர்கொள்கின்றனர்.

மொத்தம் 1 மில்லியனுக்கும் அதிகமான மூன்று மோசடி காசோலைகள் எழுதப்பட்டு உள்ளூர் ஏ.டி.எம்.களில் வைப்பீடு செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு தெரியவந்தது.

காசோலைகள் மீள் திருப்புவதற்கு முன்னர் பணத்தின் ஒரு பகுதி பின்னர் திரும்பப் பெறப்பட்டு ஒரு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது இருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு வின்ட்சரில் 17,747 மோசடி குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வின்ட்சர் பொலிஸாரின் நிதிக் குற்றப் பிரிவு அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.