விண்ட்சரில் ஸிகா வைரசை பரப்பும் நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, விண்ட்சர் எசெக்ஸ் கவுண்டி சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் றுநுஊர்ருஆல் நடத்தப்பட்ட, வழக்கமான நுளம்பு கண்காணிப்பு திட்டத்தின் போதே, குறித்த மோசமான நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வகை ஸிகா வைரசை பரப்பும் நுளம்பு, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சலை பரப்பும் திறன் கொண்டது என் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு குறித்த நுளம்பு உலகில் கண்டு பிடிக்கப்பட்ட போதும், கனடாவில் 2017ஆம் ஆண்டே குறித்த நுளம்பு கண்டு பிடிக்கப்பட்டது.
மேற்கு நைல் விண்ட்சரில் உள்ள ஒருவருக்கு ஸிகா வைரசை பரப்பும் நுளம்பு கடித்துள்ளதனை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்த வகையான நுளம்பு, சமீபத்தில் மிச்சிகன் மற்றும் பல மாநிலங்களில் இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மிச்சிகனில் மூன்று பேர் இதனால் இறந்துள்ளனர்.