விடுமுறைக் காலம் நெருங்கி வரவிருப்பதால் கனடியர்களை தங்கள் குறுகிய வேலைப் பயணங்கள் மற்றும் இன்பப் பயணங்களை மட்டுப்படுத்துமாறு மருத்துவர் தெரசா டாம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவின் பல பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட பொதுச் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து நேற்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“குறுகிய வேலைப் பயணங்கள் மற்றும் இன்பப் பயணங்களை அத்தியாவசியமானவற்றுக்கு மட்டுப்படுத்துவது, தனிமனித நடவடிக்கைகளை தற்போதுள்ள நம் வீட்டு உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்துவது மற்றும் முக்கிய தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பது நம் அனைவருக்கும் பாதுகாப்பானது.
உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே இருப்பது, உடல் ரீதியான தூர பயிற்சி, கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிவது, அத்துடன் நெரிசலான இடங்கள், மூடிய இடங்கள் மற்றும் நெருங்கிய தொடர்பு சூழ்நிலைகளைத் தவிர்ப்பது ஆகியவை அந்த நடைமுறைகளில் அடங்கும். விடுமுறை நாட்களில் நம் பாதுகாப்பைக் குறைக்க முடியாது. பின்னர் என்ன நடக்கும் என்பது பற்றி பேச வேண்டும்” என கூறினார்.