Reading Time: < 1 minute

கனேடிய மக்களில் கிட்டத்தட்ட பாதி பேர் 2022 ஆம் ஆண்டில் தங்களுடைய அனைத்து விடுமுறை நாட்களையும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

புதிய அறிக்கையின்படி, பாதிக்கும் மேற்பட்டவர்கள் விடுமுறை நேரத்தை இழந்ததாக உணர்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். தொடர்புடைய ஆய்வில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள 16 நாடுகளில் இருந்து மொத்தம் 14,527 பேர்கள் பதிலளித்துள்ளனர்.

மேலும், உங்கள் விடுமுறை நாட்கள் பறிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, வேலை செய்யும் மக்களில் 62 சதவீதம் பேர்கள் ஆம் என பதிலளித்துள்ளனர். 2021ல் இந்த எண்ணிக்கை 58% என பதிவாகியிருந்தது.

கணக்கெடுக்கப்பட்ட பத்து கனடியர்களில் ஒன்பது பேர் வழக்கமான விடுமுறைகள் அடிப்படை உரிமை என்று தாங்கள் கருதுவதாகக் கூறினர். மெக்சிகோ நாட்டவர்களில் பதிலளித்த 77 சதவீதம் பேர்கள், விடுமுறை நாட்கள் தங்களுக்கு போதுமானதாக இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

பிரான்ஸ் மக்கள் 71% பேர்கள் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஜேர்மனியில் 70 சதவீதம் பேர்கள், கனடாவில் 57 சதவீதம் பேர்கள் பெரும்பாலும் தங்களுக்கு விடுமுறை நேரம் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கனேடியர்களில் கிட்டத்தட்ட நான்கு பேரில் மூன்று பேர், பொருளாதார நிலை ஏற்படுத்திய அழுத்தம் தங்களுக்கு இன்னும் அதிக விடுமுறை தேவை என உணர வைத்ததாக தெரிவித்தனர்.

ஒன்ராறியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மக்களே, விடுமுறை நேரத்தை தங்களிடம் இருந்து பறித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், 2022ல் கனேடியர்கள் ஒதுக்கப்பட்ட 19 விடுமுறை நாட்களில் 17-ஐ பயனபடுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.