இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கையும் தாய்லாந்தும் விசா இல்லாத பயணத்தை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தகத்தில் கையெழுத்திட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
பரஸ்பர அடிப்படையில் இலவச வீசா பயண ஏற்பாட்டிற்கான உடன்படிக்கையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க தாம் இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் முக்கிய அங்கத்துவ நாடான சிங்கப்பூருடன் ஏற்கனவே இலங்கை தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்பு இருந்தே இரு நாடுகளுக்கும் விசா இல்லாதா இலவச பயணம் இருந்தது.
உறுப்பு நாடுகளில் உள்ள பெரும்பாலான விமான நிலையங்களில் ஆசியான் கடவுசீட்டை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.