வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து கனேடியர்கள் கவலை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மளிகைப் பொருட்கள் முதல் எரிவாயு வரையில் அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளன.
றொரன்டோ பெரும்பாக எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாரத்திற்கு 50 டொலர்களுக்கு எரிபொருள் பயன்படுத்தும் தாம் 80 டொலர்களை செலவிட நேரிட்டுள்ளது என சாரதியொருவர் தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்கள் விலைகளும் அதிகளவில் உயர்வடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பிரச்சினைக்கு மத்தியில் ஒன்றாரியோ மாகாணத்தில் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு ஆண்டுக்கு முன்னதாக ஐந்து பேரைக் கொண்ட குடும்பத்திற்கான உணவு செலவு 100 டொலர்களாக காணப்பட்டதாகவும் தற்பொழுது அந்த தொகை 200 டொலர்களாக உயர்வடைந்துள்ளது எனவும் மற்றுமொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.