ஹோட்டல்களை பதிவு செய்து, வருகை தராத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
கனடாவின் கியூபெர்க் மாகாண ஹோட்டல்களின் உரிமையாளர்கள் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
கட்டுமானம் செலவு, பண வீக்கம், சம்பளக் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சவால்களை ஹோட்டல் துறை எதிர்நோக்கி வருவதாக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
சில ஹோட்டல்களில் காணப்படும் ஆசனங்களை ஒதுக்கீடு செய்து இறுதி நேரம் வரையில் வருகை தர முடியாது என்பதை அறிவிக்காமல் விடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பதிவு செய்து இறுதி நேரம் வரையில் வருகை தர முடியாது என காரணத்தினால் பெரும் நஷ்டத்தை எதிர் நோக்க நேரிடுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வாறு அறிவிக்காது விடும் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் இந்த செயலினால் ஹோட்டல் ஒன்று சராசரியாக 47 ஆயிரம் டாலர்களை இழக்க நேரிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே வாடிக்கையாளர்கள் முன்பதிவு தொடர்பில் நேர்மையாக செயல்படுவதனை உறுதி செய்ய வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
அவ்வாறு நேர்மையாக செயல்படத் தவறும் வாடிக்கையாளர்கள் மீது அபராதம் விதிக்கும் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.