Reading Time: < 1 minute
கடந்த ஆண்டில் கனடிய மக்கள் வறட்சி காரணமாக பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. நாட்டில், வழமைக்கு மாறான வறட்சி நிலை நீடித்துள்ளது.
கூடிய வெப்பநிலை மற்றும் வறண்ட காலநிலை காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
கனடிய உணவு விவசாய திணைக்களம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டில் கடந்த 2023ம் ஆண்டில் 72 வீதமான பகுதிகளில் வழமைக்கு மாறாக குறைந்தளவு அளவு முதல் கடுமையான அளவிலான வறட்சி ஏற்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக கனடாவின் விவசாய நிலங்களே மிக அதிகளவில் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்தளவு பனிப்பொழிவு மற்றும் மழை வீழ்ச்சி காரணமாக இந்த ஆண்டில் கனடிய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.