றொரன்டோவில் வீட்டு வாடகை தொகைகள் மிக மிக அதிகரித்துச் செல்வதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வாடகைத் தொகை சுமார் 20 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளனர்.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் போது காணப்பட்ட அளவிற்கு மீளவும் வீட்டு வாடகைத் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
றொரன்டோ வாடகை குறித்த இணைய தளமொன்றினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சராசரி வாடகைக் கட்டணம் 2035 டொலர்களாக காணப்பட்டதாகவும் தற்பொழுது அந்த தொகையானது 2474 டொலர்களாக உயர்வடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்று ஆரம்பமானது முதல் தொடர்ச்சியாக வீட்டு வாடகை தொகை அதிகரித்துச் செல்லும் போக்கினை பதிவு செய்துள்ளது.
குறிப்பாக றொரன்டோ பெரும்பாக பகுதிகளில் வீட்டு வாடைகைத் தொகைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கனடாவில் மிகவும் வாடகைத் தொகை அதிகமான நகரமாக வான்கூவார் காணப்படுகின்றது.
வான்கூவாரில் ஒரு சதுர அடிக்கு 3.74 டொலர் வாடகை எனவும், றொரன்டோவில் 3.46 டொலர் வாடகை எனவும், யோர்க் பிராந்தியத்தில் 2.85 டொலர் வாடகை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.