வன்கூவரில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவியதற்கு பின்னர் 83சதவீதம் தீ விபத்துகள், அதிகரித்துள்ளதாக பொலிஸ் அலுவலர் டானியா விசிண்டின் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 வாரங்களில், வன்கூவர் முழுவதும் தொடர்ச்சியான சந்தேகத்திற்கிடமான தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து டானியா விசிண்டின் கூறுகையில், ‘மார்ச் 1ஆம் திகதி முதல் மே 11ஆம் திகதி வரை 99 தீ வைக்கும் குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியிலிருந்து 83 சதவீதம் அதிகரிப்பாகும்.
கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் அருகிலுள்ள கட்டிடத்திற்கு 1 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஒரு சந்தேக நபரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
சமூகம் அச்சமடைவதை நாங்கள் விரும்பவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம்.
சந்தேகத்திற்கிடமான செயலைக் கண்டால் போலீசாருக்கு அறிவிக்க வேண்டும்’ என கூறினார்.