Reading Time: < 1 minute
பிரிட்டிஷ் கொலம்பியாவின் லோயர் மெயின்லேண்டில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹெரிடேஜ் டிரைவில் உள்ள தனது வீட்டின் வாசலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு வெள்ளை எஸ்யூவியில் ஒருவர் தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பாதிக்கப்பட்ட 19 வயது யுவதி கூறியுள்ளார்.
எனினும், இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை எனவும், எஸ்யூவியிலிருந்து துப்பாக்கிதாரி அப்பகுதியிலிருந்து தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும், கணொளி மற்றும் சாட்சிகளுக்காக இப்பகுதியில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.