Reading Time: < 1 minute

குயீன் எலிசபெத் நெடுஞ்சாலையில் ரொரன்ரோ நோக்கிய வழித்தடத்தில் பாரிய சரக்கு ஊர்தி ஒன்றின் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தினால் அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகள் சில மணி நேரங்களுக்கு தடைப்பட்ட சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.

அதிகாலை ஒரு மணியளவில் West Mallக்கு அருகே இந்தச சம்பவம் இடம்பெற்றதாகவும், சரக்கு ஊர்தி மீது மோதிய காரின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பித்துச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்தச் சம்பவத்தின்போது காயமடைந்த சரக்கு ஊர்தியின் சாரதி மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு ஏற்பட்ட காயம் எவ்வறானது என்ற விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

சம்பவத்தை அடுத்து மூடப்பட்ட போக்குவரத்துகள் காலை 5:30 அளவில் மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளன.

சம்பவ இடத்திலிருந்து தப்பித்துச் சென்ற கார்ச் சாரதியைத் தொடர்ந்து தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.