கனடாவின் கல்கரி நகர மக்கள் லெபனான் மக்களுக்கு தங்களது ஆதரவையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பிலான ஒரு பேரணி ஒன்று நேற்றைய தினம் கல்கரியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படையினருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த மோதல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான லெபனான் பிரஜைகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த பின்னணியில் லெபனான் பிரஜைகளுக்கு தங்களது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கல்கரி மக்கள் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு நாடுகளில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது ஆதரவினை வெளியிடுவதாக குறித்த மக்கள் தெரிவித்தனர்.
லெபனான் மீது இஸ்ரேல் படை நடத்திய வான் தாக்குதல்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
பிராந்திய வலயத்தில் சமாதானமும் அமைதியும் நிலவ வேண்டும் என குழுமியிருந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவங்கள் தொடர்பில் லெபனான் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.