பெயிரூட் பேரழிவினால் வருத்தமும் கோபமும் அடைந்துள்ள டசன் கணக்கான மக்கள், அட்ரெமொண்டில் உள்ள லெபனான் துணைத் தூதரகத்திற்கு வெளியே போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
தற்போதைய லெபனான் ஆட்சியின் நியாயத்தன்மையை அங்கீகரிப்பதை நிறுத்துமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோரி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள், கனேடிய அதிகாரிகளுக்கு ஆட்சியுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்றும் கனடாவில் உள்ள தூதர் மற்றும் மொன்றியலில் உள்ள தூதரகத்தை வெளியேற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், அனைத்து லெபனான் மொன்றியர்களும் ஒரு பொதுவான காரணத்திற்காக ஒன்றுபட்டு அரசாங்கத்தை அகற்றுவதற்கான வாய்ப்பாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
லெபனான் அரசாங்கத்தின் பல தசாப்த கால அலட்சியம் மற்றும் ஊழல் குற்றமே இதற்கு காரணம் என அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.