Reading Time: < 1 minute

லெபனானில் இடம்பெற்று வரும் மோதல்களில் மற்றும் ஒரு கனடியர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கனடிய வெளிவிவகார அமைச்சு இது தொடர்பான தகவலை உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாக வெளிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் காரணமாக இதுவரையில் லெபனானில் இரண்டு கனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாத இறுதி பகுதி முதல் இஸ்ரேலிய படையினருக்கும் லெபனானை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையில் தீவிர மோதல் இடம் பெற்று வருகின்றது.

இந்த மோதல்களில் சிக்குண்டு இரண்டு கனடிய பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பிரஜைகளுக்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே லெபனானை விட்டு வெளியேறுவதற்கு சுமார் 1050 கனடியர்களுக்கு உதவியுள்ளதாக வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் 25 ஆயிரம் கனடியர்கள் வசித்து வருவதாக பதிவுகள் காணப்படுவதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் பதிவு செய்யப்படாதவர்கள் அதிக அளவில் இருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.