லிபரல் கட்சி பிரசார பணிப்பாளர் ஜெர்மி பிராட்ஹொஸ்ட் பதவி விலகியுள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் டுடோவிற்கு நீண்ட காலமாக உதவிகளை வழங்கி வந்த ஜெர்மி திடீரென பதவி விலகியுள்ளார்.
ஏற்கனவே என்டிபி கட்சி, அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் கட்சியின் பிரசார பணிப்பாளர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளமை கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு தசாப்த காலமாக லிபரல் கட்சியின் பல்வேறு பதவிகளை ஜெர்மி வகித்துள்ளார்.
5 தடவைகள் தேசிய பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் தேர்தலில் பிரசாரம் மிக முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
தம்மை விட சிறந்த ஊக்கமான அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய ஒருவரை கட்சி பிரசார பணிப்பாளராக நியமிப்பது பொருத்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.