Reading Time: < 1 minute

றொரன்ரோவில் எரிபொருள் விலை அதிகரிப்பு பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

றொரன்ரோ பெரும்பாக பகுதி மற்றும் தென் ஒன்றாரியோ பகுதிகளில் இவ்வாறு பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட உள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை விலை அதிகரிப்பு பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களில் பதிவாகும் அதிக தொகையாக எதிர்வரும் வெள்ளியன்று விலை அதிகரிப்பு பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 1.73 டொலர்களாக பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு கனடாவிலும் விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.