Reading Time: < 1 minute

றொரன்டோவில் இடம்பெறும் மோசடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. றொரன்டோ நகர நிர்வாகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகன தரிப்பு தொடர்பிலான விதி மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி மோசடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன விதி மீறல்கள் தொடர்பில் அதிகாரிகள் குறுஞ்செய்தி அனுப்பி வைப்பது போன்று அனுப்பி வைக்கப்படுகின்றது.

வாகனம் தரித்தல் மற்றும் வேகக் கட்டுப்பாட்டை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்திகளை திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் நகர நிர்வாகம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறுஞ்செய்திகளை அனுப்பி வைப்பதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான குறுஞ்செய்தி கிடைத்தால் அதனை திறக்காது அழித்து விடுமாறு கோரப்பட்டுள்ளது.