Reading Time: < 1 minute
றொரன்டோவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தினால் பன்னிரெண்டு பேர் தற்காலிகமாக இடம்பெயர நேரிட்டுள்ளது.
றொரன்டோவின் மேற்கு பகுதி வீடொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.43 மணியளவில் கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பின் பிகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தீயணைப்பு படையினர் தெரிவிக்கின்றனர்.
கூரைப் பகுதி உள்ளிட்ட வீடு முழுவதும் தீப்பற்றிக் கொண்டதாகவும், அருகாமையில் இருந்த வீடுகளிலிலும் தீ பரவிக் கொண்டதாகவும் தீயணைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ விபத்திற்கான காரணங்களை பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை. தீ விபத்தில் இடம்பெயர்ந்தவர்கள் பாதுகாப்பாக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.