Reading Time: < 1 minute
ரொறொன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் ரொறொன்ரோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர்கள் குறித்த எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சிறிய ஸ்ட்ரிப் மாலில் டேக்-அவுட் உணவகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.