Reading Time: < 1 minute
றொரன்டோவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் இரண்டு சாரதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
றொரன்டோவின் 401ம் இலக்க அதி வேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரும், ஆன்கஸைச் சேர்ந்த 53 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு சாரதிகளும் விபத்து இடம்பெற்ற சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு வாகனம் பிழையான திசையில் பயணித்திருக்க வேண்டுமென OPP (Ontario Provincial Police) சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.