Reading Time: < 1 minute

ஹொங் கொங் விடுதலையை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மக்கள் இணைந்து ரொறென்ரோவில் உள்ள ஹொங் கொங் பொருளாதார வர்த்தக மையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹொங் கொங் ஆட்சியாளர்களின் சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த போராட்டம் இடம்பெற்றது.

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற கணிக்கீட்டின்படி சுமார் 3 இலட்சம் ஹொங் கொங் மக்கள் கனடியப் பிரஜாவுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய சட்டமூலத்தின் அடிப்படையில் ஹொங் கொங் விவகாரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சட்டமூலத்தில் குற்றவாளிகள் பரிமாற்றமும் உள்ளடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

வெளிநாடுகளில் குடியேறியுள்ள ஹொங் கொங் மக்களும் இந்தச் சட்டத்திருத்தத்தால் பாதிக்கப்படுவார்கள் எனவும் போராட்டக்காரர்கள் கவலையடைந்துள்ளனர்.