Reading Time: < 1 minute
ரொறன்றோவில் 90 வயதான பாட்டியை கொலை செய்ததாக 34 வயதான பேரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 13ம் திகதி ஒன்றாரியோவின் வோட்டாபோர்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
90 வயதான மார்லென் வில்சன் என்ற மூதாட்டியே இந்த சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பிலான பிரேதப் பரிசோதனையின் போது குறித்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்டமை தெளிவாகியுள்ளது.
இந்த கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் அந்த மூதாட்டியின் பேரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.