Reading Time: < 1 minute

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் வீட்டு விற்பனை 7.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த மாதம் 4642 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் மாதத்தை விடவும் வீட்டு விற்பனை 12.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ரொறன்ரோ பிராந்திய வலய ரியல்எஸ்டேட் சபை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

வடன் வட்டி வீத அதிகரிப்பு, உயர்ந்த பணவீக்க வீதம், கனடிய மத்திய வங்கியின் எதிர்காலத் தீர்மானங்கள் குறித்த நிச்சயமற்றத்தன்மை போன்ற காரணிகளினால் இவ்வாறு வீட்டு விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, செப்டம்பர் மாதத்தின் சராசரி வீட்டு விலை 1119428 டொலர்கள் எனவும், இது ஆகஸ்ட் மாதத்தை விடவும் 3.4 வீத அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.