Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் மது போதையில் நித்திரையில் இருந்த சாரதி ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலைய வாகன தரப்பிடத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த வாகன சாரதி, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவாரே உறங்கிக் கொண்டிருந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகனத்தை சோதனை இட்டபோது மதுபான போத்தல்கள் திறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாகன சாரதி மது போதையில் நிதானம் இழந்து இருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரின் ஓட்டுநர் உரிமம் 90 நாட்களுக்கு இடை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபருக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்கு தொடரப்பட உள்ளது.

இந்த நபருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.