Reading Time: < 1 minute
ரொறன்ரோவில் சில பகுதிகளில் பல மணிநேர உறைபனி மழை அல்லது பனித் துகள்களைக் காணலாம் என கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சுற்றுச் சூழல் திணைக்களம், ரொறன்ரோ நகரத்திற்காக வெளியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையிலேயே, இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் அதிகமான பனிப்பொழிவு ஏற்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமை திங்கட்கிழமை வரை தொடரும் எனவும், திங்கள்கிழமை காலைக்குள் சில பகுதிகளில் 5 முதல் 10 செ.மீ வரை மொத்த பனிப்பொழிவு காணக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.