கனடாவின் ரொறன்ரோ நகரில் தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சித்ததாக தந்தை ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாரதூரமான பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு இந்த இருவரும் திட்டமிட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டம் முக்கிய கட்டத்தை எட்டி இருந்தது என கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஜூலை மாத ஆரம்பத்தில் தகவல் கிடைத்ததாகவும் அதன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந்த இருவரும் கோடரி மற்றும் வாள் ஒன்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் ரிச்மண்ட்ஹில் பகுதியின் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வித குழப்பங்களும் இன்றி சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அஹமட் போர்ட் முஸ்தபா எல்டிடி என்ற 62 வயது நபரும், முஸ்தபா எல்டிடி என்ற 26 வயதான அவருடைய மகனும் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இருவருக்கு எதிராகவும் தீவிரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
குறித்த இருவரும் திட்டமிட்ட அடிப்படையில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்திற்கு உதவியதாகவும், தீவிரவாத தாக்குதல்களை முன்னெடுக்க முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.