ரொறன்ரோவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுத முனையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
களஞ்சியசாலையொன்றில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போது பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்,
ரொறன்ரோவின் ப்ளுர் மற்றும் ஷாவ் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யோர்க், பீல் மற்றும் றொரன்டோ பொலிஸார் கூட்டாக இணைந்து இந்த கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த்துள்ளனர்.
சந்தேக நபர்கள் களவாடப்பட்ட வாகனமொன்றில் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
இதன் போது பொலிஸார் ஆயுதம் தரித்திருந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.