Reading Time: < 1 minute

கனடா அரசும் ரொறன்ரோ நகர நிர்வாகமும் இணைந்து, பொதுமக்களுக்காக 5,600க்கும் மேற்பட்ட புதிய வாடகை வீடுகளை நிர்மாணிக்க உள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

இதற்காக சுமார் 2.7 பில்லியன் டொலர் முதலீட்டில் 18 வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 5,600க்கும் அதிகமான வீடுகளை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 4,500க்கும் மேற்பட்ட வீடுகளின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்படும் அனைத்து வீடுகளும் விற்பனைக்காக அல்லாமல், பொதுமக்களுக்கு வாடகைக்கு வழங்குவதற்காகவே கட்டப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ரொறன்ரோ நகரில் அதிகரித்து வரும் வீட்டுவசதித் தேவை மற்றும் வாடகை வீடுகளுக்கான பற்றாக்குறையைச் சமாளிக்கும் முக்கிய நடவடிக்கையாக இந்தத் திட்டம் கருதப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.