Reading Time: < 1 minute
ரொறன்ரோவில் சுமார் 17000 டொலர் பெறுமதியான பொருட்களை களவாடிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யோங் மற்றும் டுன்டாஸ் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கடையொன்றில் குறித்த நபர் இவ்வாறு பொருட்களை களவாடியுள்ளார்.
கடந்த மே மாதம் 23ம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 16ம் திகதி வரையில் இவ்வாறு பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
இந்த நபர் கடைக்கு சென்று பணம் செலுத்தாது பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
40 வயதான பெற்றிக் ஹோரா என்ற நபரே இவ்வாறு பொருட்களை களவாடியுள்ளார்.
இந்த சந்தேக நபருக்கு எதிராக சுமார் பதினொரு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.