Reading Time: < 1 minute

ரொரன்டோ –ஸ்கார்பரோ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒமிக்ரோன் புதிய திரிபு கொரோனா தொற்றுக்குள்ளாகி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ரொரன்டோ பொது சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.

கனடாவில் பாடசாலை ஒன்றில் ஒமிக்ரோன் தொற்று நோயாளி கண்டறியப்பட்ட முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

எனினும் தொற்று உறுதி செய்யப்பட்டவர் மாணவரா? அல்லது பணியாளரா? என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் நெருங்கிய தொடர்புகள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஒன்ராறியோ மாகாணத்தில் இதுவரை 13 பேர் புதிய ஒமிக்ரோன் கொரோனா திரிபால் பாதிப்ப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரொரன்டோ, டர்ஹாம், பீல் பிராந்தியம் மற்றும் யோர்க் பிராந்தியங்களில் ஒமிக்ரோனா தொற்று நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.