ரஷ்யாவில் இடம் பெற்று வரும் பதற்ற நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக கனடா அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் துணை ராணுவ குழுவான வாக்னர் படை, இராணுவப் படையினருடன் மோதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரேனுடன் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக ரஷ்யாவிற்கான பயண அறிவுறுத்தல்களை கனடா தமது நாட்டு பிரஜைகளுக்கு விடுத்திருந்தது.
இந்த நிலையில் உள்நாட்டில் தற்பொழுது நிலவிவரம் பதற்ற நிலைமை காரணமாக ரஷ்யாவிற்கான பயணங்கள் தொடர்பில் மேலும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரேனில் ரஷ்யாவிற்கு ஆதரவாக போரில் ஈடுபட்டிருந்த கூலிப்படையினர் இவ்வாறு ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக திரும்பி உள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் தலைநகரம் நோக்கி முன்நகர்ந்த வேக்னர் படையினர் இறுதி நேரத்தில் அந்த தீர்மானத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது, குறிப்பாக பெல்லாரஸ் நாட்டின் தலையீடு காரணமாக வேக்னர் படையினர் மோதல்களில் ஈடுபடுவதனை தவிர்த்து மாஸ்கோவை விட்டு வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இந்த அனைத்து நிலைமைகள் குறித்தும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கனடிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.